பக்கம் எண் :

க

தாலாட்டு

243

களைத்துப்போன நேரத்திலே - கண்ணேமனிதர்
        கள்இறக்கிக் குடிப்பாங்களாம்.

80

தென்னம்பிள்ளை நட்டவங்க - கண்ணேஅதுக்குத்
        தினந்தோறும் தண்ணிஊற்றிப்

    புள்ளையைப்போல் பொத்திப்பொத்திக் - கண்ணேநல்ல
        பொறுமையோடே வளர்ப்பாங்களாம்.

    இடைக்கிடையே களையெடுத்துக் - கண்ணேஅதை
        இடைவிடாமே பாப்பாங்களாம்.

    பட்டமட்டை எல்லாத்தையும் - கண்ணே அவர்
        பதமாத்தானும் தறிப்பாங்களாம்.

    ஓலைக்கெல்லாம் காசுதானாம் - கண்ணேஅந்தப்
        பாளைக்கெல்லாம் காசுதானாம்.                 

85

மட்டைக்கெல்லாம் காசுதானாம் - கண்ணேதென்னங்
        கட்டைக்கெல்லாம் காசுதானாம்.

    விட்டத்துக்கும் காசுதானாம் - கண்ணேதென்னஞ்
        சட்டத்துக்கும் காசுதானாம்.

    சிற்றுத்தேங்காய்க்கும் காசுதானாம் - கண்ணேஅந்த
        நெற்றுத்தேங்காய்க்கும் காசுதானாம்.

    அடிதொடங்கி நுனிவரைக்கும் - கண்மணியே
        அல்லாத்துக்கும் காசுதானாம்.

    மாங்காயும் தேங்காயும் - கண்மணியே
        மச்சினன் மாமன் போலிருக்காம்.
                

90

மாங்காய்க்கும் கொழுத்தகாசு - கண்மணியே
        தேங்காய்க்கும் கொழுத்தகாசு.

    மத்தியான்ன வேளையில்தான் - கண்ணேநல்ல
        மதிப்பிருக்கும் தோப்புக்கெல்லாம்

    பொடிபொசுக்கும் நேரமெல்லாம் - கண்ணேமனிதர்
        போவாங்களாம் மாந்தோப்புக்கு.

    கானலிலே காட்டுமாங்காய் - கண்மணியே
        கண்டையாடி பொன்மயிலே?