|
இறங
இறங்காத சோற்றைகூடக்
கண்மணியே
இறக்கிடுமாம் அந்தமாங்காய்.
95
எலுமிச்சம் ஊறுகாயும் -
கண்ணேநல்ல
கொளுமிச்சம் ஊறுகாயும்
நாரத்தங்காய் ஊறுகாயும்
- கண்மணியே
ஏறத்தாழ ஒண்ணுதானே?
எழுந்திரம்மா கன்றுக்குட்டி
- கண்ணேநீ
இலைபோட்டுச் சோறுதின்ன.
அப்பாவர நேரமாச்சு - கண்ணேநீ
அழுகாமே சோறுதின்னு.
_________
தோட்டம்
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
ஆற்றோரம் தோட்டம்வெட்டி
- கண்மணியே
அதிலேநல்ல பாத்திகட்டி,
பாத்திக்கெல்லாம் தண்ணிபாய்ச்சி
- கண்மணியே
பதனமாத்தான் விதைவிதைத்து,
கன்றுநாற்றைக் கொண்டுவந்து
- கண்மணியே
கானோரம் நட்டுவச்சு
ஆடுமாடு அழிக்காமே - கண்மணியே
அதைச்சுற்றி வேலிகட்டி
5
நாய்நரிகள் அழிக்காமே
- கண்மணியே
நல்லாமுள்ளு வேலிகட்டிப்
பன்றிகின்றி நுழையாமே -
கண்மணியே
பத்திரமா வேலிகட்டி
இராப்பகலாக் காவல்காக்கக்
- கண்மணியே
நாயக்கன்மாரை வைத்தோமடி.
|