|
நல
நல்லபழம் நல்லபழம் -
கண்மணியே
நாமெல்லாம் தின்னும்பழம்.
பறந்துபோற குருவியெல்லாம்
- கண்மணியே
பற்றிநல்லாத் தின்னும்பழம்.
10
_________
வீடு கட்டின கதை
குச்சுவீடும் பற்றாமே -
கண்மணியே
கூறைவீடும் பற்றாமே
சின்னவீடும் பற்றாமே -
கண்மணியே
மண்ணுவீடும் பற்றாமே
இரண்டடுக்கும் பற்றாமே -
கண்மணியே
ஏழடுக்கு மெத்தைகட்ட
அப்பாபட்ட பாட்டைப்பார்த்தால்
- கண்மணியே
அழுகைகூட வருதெனக்கு.
காலையிலே எழுந்திருச்சுக்
- கண்மணியே
கால்கையெல்லாம் கங்கையிலே
5
மூஞ்சிமுகம் எல்லாமுமே -
கண்மணியே
முடக்கம்ஒண்ணும் இல்லாமலே
கழுவிச்சுத்தம் பண்ணிக்கிட்டுக்
- கண்மணியே
கடவுளையும் கும்புட்டுட்டுக்
கம்மான்செம்மான் கிட்டப்போய்க்
- கண்மணியே
கட்டடத்தைப் பற்றிப்பேசிப்
போயன்மார்க் கிட்டப்போய்க்
- கண்மணியே
பொழுதெல்லாம்
பழமைபேசிச்
சேர்வைகாரர் கிட்டப்போய்க்
- கண்மணியே
சிற்றாளைப் பற்றிப்பேசி
10
மரக்காரர் கிட்டப்போய்க்
- கண்மணியே
மரச்சங்கதி யெல்லாம்பேசிச்
சிவனாண்டி கிட்டப்போய்க்
- கண்மணியே
செங்கல்லைப் பற்றிப்பேசிச்
|