|
சுப
சுப்ரமணி கிட்டப்போய்க்
- கண்மணியே
சுண்ணாம்பைப் பற்றிப்பேசி
மாயாண்டி கிட்டப்போய்க்
- கண்மணியே
மணலைப்பற்றி யெல்லாம்பேசி
வயிற்றுப்பசி எடுத்ததாலே
- கண்மணியே
வந்தாரம்மா வீடுதேடி.
15
அரண்மனைக்கு மேலேகட்டக்
- கண்மணியே
அகன்றகாலு வச்சாரம்மா.
எசலுப்புப் போட்டுக்கிட்டுக்
- கண்மணியே
எடுத்தாரம்மா பெருத்தவேலை.
ஏழுமெத்தை கட்டணுண்ணு -
கண்மணியே
இறைத்தாரம்மா பணத்தையெல்லாம்.
பணத்தைநல்ல பணமென்றுதான்
- கண்மணியே
பார்க்காமேதான்
இறைத்தாரம்மா.
காசைநல்ல காசென்றுதான்
- கண்மணியே
கனவிலேயும் நினைக்காமே
20
கண்டதையம்மா செலவழிச்சுக்
- கண்மணியே
கட்டினார் மெத்தைவீடு.
போயன்மார் பொண்ணுங்கூடக்
- கண்மணியே
பொளந்தாங்களே பாறைகளை.
வாணம்வெட்ட ஆணும்பெண்ணும்
- கண்மணியே
வந்தார்களே வரிசையாத்தான்
பாறைகரும் பாறையாலே -
கண்மணியே
பலிக்கலையாம் வாணவேலை.
ஜம்பர்கம்பி டம்பமாத்தான்
- கண்மணியே
பம்பரம்போல் பாறையைத்தான்
25
தொளைதொளையா எலிவளைபோல்
- கண்மணியே
தொளைச்சுருச்சாம் முழம்முழமா
கருமருந்தும் திரிநெருப்பும்
- கண்மணியே
கணக்கில்லாமே கொண்டாந்துதான்
|