பக்கம் எண் :

தாலாட்டு

247

கருமருந்தைத் தொளைக்குள்ளேதான் - கண்மணியே
        கணக்குப்போலக் கெட்டித்துத்தான்

    திரியறுத்து மருந்தில்வச்சுக் - கண்மணியே
        தீக்கொளுத்தத் திடீரெண்ணுதான்

    படாருண்ணு வெடிச்சிருச்சாம் - கண்மணியே
        பாறையெல்லாம் சுக்குச்சுக்கா.                 

30

வாணம்வேலை முடிஞ்சராவு - கண்ணேஅப்பா
        வாணவேடிக்கை காட்டினாரு.

    நட்சத்திரம் நாள்எல்லாம்பார்த்துக் - கண்மணியே
        அஸ்திவாரம் போட்டாங்களாம்.

    போயன்மாரு எல்லாருக்கும் - கண்ணே அப்பா
        போதுமான பணங்கொடுத்து

    ராவேலையும் செய்யச்சொல்லிக் - கண்ணேஅதுக்கும்
        ஞாயமான பணங்கொடுத்துக்

    காந்தத்திலே விளக்குப்போட்டுக் - கண்மணியே
        கணக்காவேலை முடிச்சாராம்.                 

35

சொன்னபடி சிவனாண்டியும் - கண்மணியே
        செங்கல்கொண்டுவந் தடுக்கினானாம்.

    மலைபோலே மணலைத்தானும் - கண்மணியே
        மாயாண்டியும் குவித்தானாம்.

    சுறுசுறுப்பாச் சுப்பிரமணியும் - கண்மணியே
        சுண்ணாம்பெல்லாம் கொண்டாந்தானாம்.

    கருப்பட்டியும் கனமுட்டையும் - கண்மணியே
        கலந்தாங்களாம் சாந்துகூட.

    கும்மியென்ன கூட்டமென்ன - கண்மணியே
        குனிந்துநிமிர்ந்தும் குத்திக்கிட்டுத்      
         

40

தில்லாலப் பாட்டுஎன்ன - கண்மணியே
        தெம்மாங்குப் பாட்டுஎன்ன

    களைத்தவர்கள் நிற்கையிலே - கண்ணேஅப்பா
        காபிகூடக் கொடுத்தாராம்.