பக்கம் எண் :

மரக

248

மலையருவி

மரக்காரர் மரவேலையைக் - கண்ணேஒண்ணும்
        மறக்காமல்தான் முடித்திட்டாராம்.

    கணக்கில்லாத கொத்தன்மாரும் - கண்மணியே
        கண்கொள்ளாத சிற்றாட்களும்

    சேர்வைகாரர் மூலத்தாலே - கண்ணேஅவர்
        செங்கல்வேலை துவக்கையிலே                

45

ஆட்டம்என்ன பாட்டம்என்ன - கண்மணியே
        வேட்டிஎன்ன வேலைக்காரருக்கு!

    கதவுநிலை வைக்கையிலே - கண்மணியே
        கடலை அவலும்என்ன

    தேங்காய்என்ன பழங்கள்என்ன - கண்மணியே
        தெருவில்வெற்றிலை பாக்குஎன்ன!

    அகஸ்மாத்திலே வந்தவங்களுக்கும் - கண்மணியே
        அழகானபூ மாலைஎன்ன

    கொட்டுஎன்ன மேளம்என்ன - கண்மணியே
        கொண்டையிலே பூவும்என்ன 
                

50

கதவுகளும் சன்னல்களும் - கண்மணியே
        கணக்காக்கொத்தன்மார் வச்சான்களாம்.

    சட்டங்களும் விட்டங்களும் - கண்மணியே
        கட்டடத்திலே கணக்கில்லையாம்.

    ஏழுமாசக் கெடுவுவச்சுக் - கண்ணேநாம்
        ஏழுமெத்தை வீட்டை முடிச்சு

    அரண்மனையார் அசந்துபோகக் - கண்ணேஅப்பா
        அட்டகாசம் பண்ணினாரே.

________

உறங்கிடம்மா!

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ

    சுருட்டைப் புளியமரம் - கண்மணியே
        சூதாடும் நந்தவனம்