பக்கம் எண் :

பரட

தாலாட்டு

249

பரட்டைப் புளியமரம் - கண்மணியே
        பந்தாடும் நந்தவனம்.

    காக்காயும் கத்தக்கத்தக் - கண்ணேரெண்டு
        கன்னிமாரு வாறாங்க.

    செம்போத்துக் கத்தக்கத்தக் - கண்ணேரெண்டு
        சேவகரு வாறாங்க.                      

 5

ஆற்றுமண லைப்பரப்பிக் - கண்ணேசோறு
        ஆக்கிவிளை யாடையிலே

    ஆக்கிநீ வச்சசோற்றைக் - கண்மணியே
        அழித்திட்டானோ உன்மாமன்?

    மாமன் பொதிஅளக்கக் - கண்மணியே
        மச்சினன்மார் கோட்டைகட்டக்

    கரும்புருக வேம்புருகக் - கண்மணியே
        கண்டவர்கள் மனமுருக

    இரும்புருகப் பெற்றெடுத்த - கண்மணியே
        இருதயத்தை ஆரடித்தார்?                     

10

அத்தைமக்கள் வாசலுக்குக் - கண்மணியே
        நித்தநித்தம் போகாதே.

    பாம்படித்துப் போடுவார்கள் - கண்மணியே
        பழிகார அத்தைமக்கள்.

    சோறு அடுப்பிலேதான் - கண்மணியே
        சோலைக்கிளி கையிலேதான்.

    பாலும் அடுப்பிலேதான் - கண்மணியே
        பாலைக்கிளி கையிலேதான்.

    ஆரு அடித்தார்கள் - கண்ணேஉன்னை
        அரளிப்பூச் செண்டாலே?                     

15

மச்சினிச்சி அடித்தாளோ - கண்ணேஉன்னை
        மல்லிகைப்பூச் செண்டாலே?

    ஒருச்சாய்த்துப் படுத்துநீ - கண்மணியே
        உறங்கிடம்மா தொட்டியிலே.

________