பக்கம் எண் :

தண

தாலாட்டு

251

தண்ணிஊற்றத் தாதிநாலு - கண்மணியே
        தலைஉலர்த்தத் தாதிநாலு.
            

15

சிக்கெடுக்கத் தாதிநாலு - கண்மணியே
        செல்லங்கொஞ்சத் தாதிநாலு.

    கையமுக்கத் தாதிநாலு - கண்மணியே
        கால்அமுக்கத் தாதிநாலு

    கும்மாளம்போடத் தாதிவேறே - கண்மணியே
        கும்மியடிக்கத் தாதிவேறே.

    வீர்வீரென்று அழுகையிலே - கண்மணியே
        வேடிக்கைக்காட்டத் தாதிவேறே.

    சத்தம்போட்டு அழுகையிலே - கண்மணியே
        சதிராடத் தாதிவேறே.                      

20

செல்லங்கொஞ்சி அழுகையிலே - கண்மணியே
        சிரிப்புக்காட்டத் தாதவேறே.

    படிக்கட்டிலே விழுந்திடாமே - கண்ணேஎன்னைப்
        பாதுகாக்கத் தாதிநாலு.

    பளிங்கிலே வழுக்கிடாமே - கண்மணியே
        பாதுகாக்கத் தாதிநாலு.

    கைகால் பிசகிடாமே - கண்மணியே
        கண்டபடி சுளுக்கிடாமே

    ஊர்ந்துகிட்டுத் திரிகையிலே - கண்மணியே
        உரல்மேலே மோதிடாமே.                     

25

பால்குடிக்கும் நேரத்திலே - கண்மணியே
        புறங்காலைப் பாலேறாமே

    சின்னச்சின்னப் பிள்ளைகூடக் - கண்மணியே
        சேர்ந்துநான் விளையாடையிலே

    சீக்குப்பிணி அண்டிடாமே - கண்மணியே
        சேதம்ஒண்ணும் ஆகிடாமே

    ஈயெறும்பு கடிச்சுடாமே - கண்மணியே
        எல்லாம்பார்க்கத் தாதிவேறே.