பக்கம் எண் :

252

மலையருவி

மருந்தரைக்கத் தாதிவேறே - கண்மணியே
        மருந்துபோடத் தாதிவேறே.

    30

தலைகால்என் னமும்வலித்தால் - கண்மணியே
        தைலந்தேய்க்கத் தாதிவேறே.

    ஊஞ்சல்கட்டத் தாதிவேறே - கண்மணியே
        ஊஞ்சலாட்டத் தாதிவேறே.

    எண்ணெயிலே ஒத்தடமும் - கண்மணியே
        வெந்நீரிலே ஒத்தடமும்

    இன்னம்வேறே ஒத்தடமும் - கண்மணியே
        எனக்குக்கொடுக்கத் தாதிவேறே.

    செல்வத்தி லேபிறந்தேன் - கண்மணியே
        செல்வத்தி லேவளர்ந்தேன்.                     

35

ஆடுஎன்ன மாடுஎன்ன - கண்மணியே
        காடுஎன்ன வீடுஎன்ன

    முத்துஎன்ன ரத்னம்என்ன - கண்மணியே
        சொத்துஎன்ன கெத்துஎன்ன

    வகைவகையாய் நகைகள்என்ன - கண்மணியே
        ஜதைஜதையாய் நகைகள்என்ன

    சாரட்டுவண்டிஎன்ன - கண்மணியே
        சலங்கைபோட்ட வண்டிஎன்ன

    அஞ்சு வயசிலேநான் - கண்மணியே
        அரிசித்தரி படிச்சேனம்மா.                    

40

பத்துவயசுக் குள்ளேநான் - கண்மணியே
        படிப்பெல்லாம் முடிச்சேனம்மா.

    பன்னிரண்டு வயசிலேநான் - கண்மணியே
        பருவமான காலத்திலே

    வாலிபப் பிராயத்திலே - கண்மணியே
        வாழ்க்கைப்பட்டேன் உங்கப்பாவுக்கு

    வருசம்பத் திருவதுமாச்சு - கண்மணியே
        வாசனைக்கும் பிள்ளையில்லை.