த
தினைமாவைத் திரித்துவைத்துக்
- கண்மணியே
திரித்தமாவைச் சலித்துவைத்துச்
45
சலித்தமாவை உருட்டிவைத்துக்
- கண்மணியே
சலிப்பில்லாமே இனிப்பும்போட்டு
புள்ளையார்க்கும் கொடுத்துப்பார்த்தேன்
- கண்மணியே
பூசாரிக்கும் கொடுத்துப்பார்த்தேன்.
ஒருபிள்ளைக்குப் பத்துருண்டை
- கண்மணியே
ஊர்ப்பிள்ளைக்கும்
கொடுத்துப்பார்த்தேன்.
நேத்திக்கடன் நிறைவேற்றினேன்
- கண்மணியே
நெய்விளக்கு ஏற்றிவைத்தேன்.
தானமெல்லாம் செய்துபார்த்தேன்
- கண்மணியே
தருமமெல்லாம் செய்துபார்த்தேன்.
50
காசிதீர்த்தம் செய்துபார்த்தேன்
- கண்மணியே
குற்றாலத்தில் குளித்துப்பார்த்தேன்.
ராமேச்வரம்
போய்ப்பார்த்தேன் - கண்மணியே
பாவநாசமும்
போய்ப்பார்த்தேன்.
பழனிமலை மேலிருக்கும் -
கண்மணியே
பழனியாண்ட வனையும்பார்த்தேன்.
கொஞ்சறத்துக்குப்
பிள்ளையில்லை - கண்மணியே
கொள்ளிவைக்கப்
பிள்ளையில்லை.
என்னபாவம் செய்தேனோஅம்மா
- கண்மணியே
ஏதுபாவம் செய்தேனோஅம்மா!
55
மெழுகிவைத்த வீட்டுக்குள்ளே
- கண்மணியே
விளையாடப் பிள்ளைஇல்லை.
கூட்டிவைத்த வீட்டுக்குள்ளே
- கண்மணியே
குப்பைபோடப்
பிள்ளைஇல்லை.
நிறைத்துவைத்த
நிறைகுடத்தைக் - கண்மணியே
குறைத்துவைக்கப்
பிள்ளைஇல்லை.
ஆக்கிவைத்த
அண்டாச்சோற்றைக் - கண்மணியே
அள்ளித்தின்னப் பிள்ளைஇல்லை.
|