பக்கம் எண் :

4

சிறுவர் உலகம்

261

4

கவானைக் கவட்டி கவட்டி கவட்டி
        பலிஞ் சடுகுடு. . . . . . . . . . .

5

பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?
        பல்லு ரெண்டும் போவானேன்?
        உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்
        ரெண்டுபணம் தண்டம் தண்டம் தண்டம்.

6

தூதூ நாய்க்குட்டி - தொட்டியத்து நாய்க்குட்டி
    வளைச்சுப் போடடா நாய்க்குட்டி
    இழுத்துப் போடடா நாய்க்குட்டி
    நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி!

7

கிக்கீக்குங் கம்பந் தட்டை
        காசுக்கு ரெண்டு தட்டை
        கருணைக் கிழங்கடா
        வாங்கிப் போடடா வாங்கிப் போடடா.

8

 அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை
    கல்லிலே போட்டால் சுரைக் குடுக்கை
    சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை. . . . .

9

அந்த அரிசி இந்த அரிசி
        நேத்துக் குத்தின கம்பரிசி
        கம்பரிசி கம்பரிசி கம்பரிசி.

10

கருணைக் கிழங்கடா வாழைப் பழமடா
    தோலை உரியடா தொண்டைக்குள் அடையடா
    அடையடா அடையடா அடையடா!