பக்கம் எண் :

11

262

மலையருவி

11

கீச்சுக் கீச்சடா கீரைத் தண்டடா
    நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா
    பட்டுப் போச்சடா பட்டுப் போச்சடா.

12

கொத்துக் கொத்து ஈச்சங்காய்
        கோடாலி ஈச்சங்காய்
        மதுரைக்குப் போனாலும்
        வாடாத ஈச்சங்காய்
        ஈச்சங்காய் ஈச்சங்காய்.

_______

கல்லாங்காய் விளையாட்டு

1

கொக்குச்சிக்

கொக்கு

ரெட்டை

சிலாக்கு

மூக்குச்

சிலந்தி

நாக்குலா

வரணம்

ஐயப்பன்

சோலை

ஆறுமுக

தாளம்

ஏழுக்குக்

கூழு

எட்டுக்கு

முட்டி

ஒன்பது

கம்பளம்

பத்துப்

பழம் சொட்டு.

2

1.

கட்டை வச்சேன் மரம் பிளந்தேன்

2.

ஈரிரண்டைப் போடடா
இருக்க மாட்டைக் கட்டடா
பருத்திக் கொட்டையை வையடா
பஞ்சணேசா.