பக்கம் எண் :

கண

தெம்மாங்கு

27

கண்டாங்கிச் சீலைக்காரி
        கைரெண்டும் வளையல்காரி

    கண்டால் வரச்சொல்லுங்கோ
        ரெண்டாம்நம்பர்த் தோட்டத்துக்கு.    
              

168

ஆலம் விழுதுபோலே
        அந்தப்புள்ளை தலைமயிரு

    தூக்கி முடிஞ்சிட்டாளாம்
        தூக்கணத்தாங் கூடுபோல 
                 

169

கானகக் கரிசலிலே
        களையெடுக்கும் பொண்மயிலே

நீலக் கருங்குயிலே
        நிற்கட்டுமா போகட்டுமா?
               

170

பாக்குத் துவர்க்குதடி
        பழையஉறவு மங்குதடி

    போட்டால் சிவக்குதில்லை
        பொன்மயிலே உன்மயக்கம்
                 

171

கச்சேரி கண்டபிள்ளை
        கையெழுத்து வச்சபிள்ளை

    போலீசைக் கண்டபிள்ளை
        போதுமடி உன்உறவு
                       

172

கறுத்தபிள்ளை முழிசுருட்டிக்
        கதவைஏண்டி திறந்துபோட்டாய்?

    கறுத்தநாய் பூந்துக்கிட்டு
        இழுத்துதடி அப்பன்சோற்றை.                

173

மண்வெட்டி தோளில்வச்சு
        மண்வெட்டப் போறவனே

    மண்ணுத்தூக்க நானும்வாறேன்
        மன்னாஎன்னைக் கூட்டிப்போடா.
              

174