New Page 1
ரோட்டுமண்ணை யெல்லாம்வெட்ட
ரோசத்தோடே போறவனே
பிக்காசு கூடஇல்லாமே
பக்காச்சூரா எங்கேபோறாய்?
175
கூலிவேலை செய்றதுக்குக்
கூடிப்போகும் கோமுட்டியே
கூடநீ வந்தாயிண்ணால்
கோடிப்பணம் தாரேனடா.
176
தங்கத்திலே பீலிசெய்யத்
தட்டான்கிட்டே
கொடுத்தேன்பொன்னு
பீலிசெய்ய மாட்டாமே
பின்வாங்கித்தான்
போனானடா.
177
நல்லமூக் குத்திசெய்ய
நானூறு பொன்கொடுத்தேன்
பொன்னையும் எடுத்துக்கிட்டுப்
போய்விட்டானே ரங்கூனுக்கு.
178
பாதசரம் செய்யச்சொல்லிப்
பத்தாயிரம்
பொன்கொடுத்தேன்
பாதசரம் செய்யாமல்தான்
பாவிமகன் ஓடிட்டானே.
179
தங்கத்துக்குத் தங்கங்கொடுத்துத்
தனித்தங்கமும் சேர்த்துக்கொடுக்கப்
பித்தளைத் தங்கத்தாலே
பீலிரெண்டாச் செய்தபையா!
180
அழுக்கு எடுக்கும்வண்ணான்
ஆத்தோரம் போகும்வண்ணான்
உடுப்புத் துவைக்கும்வண்ணான்
உண்ணம்வரக் காணோமடி.
181
|