பக்கம் எண் :

வண

தெம்மாங்கு

29

வண்ணாரப் பொண்ணொருத்தி
        கிண்ணாரம் வாசிக்கிறதைக்

    கண்ணாலே பார்த்துநானும்
        கண்கலங்கி நின்றேனடி.
                   

182

ஆற்றங் கரையோரமாய்
        அழகாநல்ல கல்புதைத்து

    அழுக்கைஅடித் துக்கசக்கும்
        அளகேசவண்ணான் வாறாண்டி.                   

183

கன்னார முருகாஅடா
        கனஇரும்பு என்னடாநீ

    இந்நேரம் என்னடாநீ
        இரும்புத்தடி செஞ்சாச்சாடா?
                 

184

இரும்பைநீ காயவச்சு
        சிறுசம்மட்டியி லேயடிச்சு

    பட்டாரெண் டையும்முடிச்சுக்
        கட்டைவண்டி பூட்டிடடா.  
                    

185

கள்ளன்கிள்ளன் சாமத்திலே
        கதவுடைத்துப் புகுந்திடாமே

    தனிஇரும்பி லேயடிச்சு
        தந்திடடா தாழ்ப்பாள்ரெண்டு.
                  

186

குறும்பொண்ணுஞ் செய்யாதேடா
        இரும்படித்துப் பிழைக்கும்பையா

இரும்புக் குலுமைஒண்ணு
        திரும்பையிலே கொண்டாடாநீ.
                  

187

கொத்துவேலைக் காரப்பையா
        கொத்துவேலை தெரியுமாடா?

    கல்லுக்கொத்து வேலையில்லை
        கட்டட வேலையடா இது.                    

188