பக்கம் எண் :

30

மலையருவி

சாயக்கல்லெல் லாம்பதித்துச்
        சதுரமாநீ மண்ணுப்பூசி

    கூடம்ஒண்ணு கூட்டிக்கட்டிக்
        கூரைபோட்டுத் தருவாயாடா?
                 

189

கண்டவர்கள் சிரிக்காமே
        களிமண்ணிலே கட்டாதேடா

    இசைக்கல்லு வரிதப்பாமே
        இரும்புபோலே கட்டணுண்டா.
            

190

அடிவரிசைக் கல்லுகளும்
        அஸ்திவாரமும் முக்கியண்டா

    படிக்கட்டுகள் வைக்கும்போது
        பார்க்காதேடா பராக்குநீ.
       

191

கம்பு விளைந்துநல்லாக்
        கதிர்விடும் காலத்திலே

காட்டுவெட்டுக் கிளிகளெல்லாம்
        கம்பைவந்து தின்றதடி. 
                   

192

காடை கழுத்தறுத்து
        கவுதாரிப் பித்தெடுத்து

    கோழி குடலெடுத்து
        கூட்டுறாளாம் கைம்மருந்து.
            

193

கறுப்பரிசிச் சோறாக்கிப்
        பருப்புக் குழம்புகாய்ச்சி

    கிண்ணியிலே போடும்முன்னே
        கைவிலங்கு வந்திடுச்சாம்.
          

194

ரோட்டோரம் வீட்டுக்காரி
        ரோசாப்பூச் சேலைக்காரி

    காதோரம் கொண்டைக்காரி
        கையலைப்பில் கெட்டிக்காரி.                

195