எட
எட்டுமலைக் கந்தப்பக்கம்
- இன்றைக்கு
இளைப்பாறப்
போறாளாம்.
இளனிக்கண்ணு களைத்திறந்து
- இன்றைக்கு
மேலேபார்த்துப் போறாளாம்.
6
பத்துமலைக் கந்தப்பக்கம்
- இன்றைக்குப்
பசியாறப்
போறாளாம்.
பச்சரிசிச்
சோறாக்கி இன்றைக்குப்
பசியாற்ற முடியலையே!
7
அறைக்கீரை சிறுபாத்திநான்
- இந்த
ஐயருடையதேவி
அரும்பெடுக்கும் நாளையிலே
- எங்களை
அலையவிட்டுப்
போகலாமா?
8
முளகாய்க்கீரைச் சிறுபாத்திநான்
- இந்த
முதலியாரு தேவி
மொக்கெடுக்கும் நாளையிலே
- எங்களை
மோசஞ்செய்து
போகலாமா?
9
கூடத்தை இன்றைக்குக்கட்டி
- இங்கே
குயிலிரண்டு
எழுதலையோ?
கூடம்மாத் திரம்இருக்க
- அந்தக்
குயில்போன மாயம்என்ன?
10
மாடத்தை
இன்றைக்குக்கட்டி - இங்கே
மயிலிரண்டு
எழுதலையோ?
மாடம்மாத்
திரம்இருக்க - அந்த
மயில்போன
மாயம்என்ன?
11
குளத்தங்
கரையோரம்நான் - ஒரு
குயில்போலக்
குந்தியிருந்தேன்
குயிலென்றும்
பார்க்காமே - ஒரு
குண்டுபோட்டுச்
சுட்டுட்டானே!
12
ஆற்றங் கரையோரம்
- ஒரு
அன்னம்போல்
குந்தியிருந்தேன்
அன்னமென்றும்
பார்க்காமே - ஒரு
அம்பைவைச்சு
எய்தானே!
13
|