பூம
பூமியைநான் நம்பியல்லோ
- ரெண்டு
புள்ளைகளைப் பெற்றெடுத்தேன்
பூமிசதி பண்ணிடுச்சே
- என்
புள்ளைதொப்பை வாடிருச்சே!
14
மானத்தைநான் நம்பியல்லோ
- ரெண்டு
மக்களைநான் பெற்றெடுத்தேன்
மானம்சதி தான்பண்ணுதே
- என்
மக்கள்தொப்பை
வாடுதே!
15
குருவி சலித்ததென்றால்
- அது
காதத்துக்குக்
காதம்போகும்
பொண்ணு சலித்தேனென்றால்
- நான்
எங்கேதான்
போய்ஆறுவேன்!
16
காக்காய் சலித்ததென்றால்
- அது
காதத்துக்குக்
காதம்போகும்
மங்கை சலித்ததென்றால்
- நான்
எங்கேதான்
போய்ஆறுவேன்!
17
மானம் சலித்ததென்றால்
- அது
மண்மேலே மழைஊற்றும்
பொண்ணு சலித்தேனென்றால்
- நான்
எங்கேதான்
போய்ஆறுவேன்!
18
சமைந்தபெண் சலித்ததென்றால்
- அவள்
சாக்கடைதூரந் தான்போவாள்
மங்கை சலித்தேனென்றால்
- நான்
எங்கேதான்
போய்ஆறுவேன்?
__________
ஒப்பாரி
காசிக்குப் போனதுண்டு
- நான்
கைவிளக்கைத் தொட்டதுண்டு
கைவிளக்கைத்
தொட்டபாவம் - என்
கணவனுக்குப்
பட்டதம்மா!
1
|