பக்கம் எண் :

புலம்பல்

283

மதுரைக்குப் போனதுண்டு - நான்
        மணிவிளக்கைத் தொட்டதுண்டு
    மணிவிளக்கைத் தொட்டபாவம் - என்
        மன்னவனைப் பட்டதம்மா!

2

*       *       *

கொத்துமல்லிப் பூப்பூக்கும்
        கொடிகொடியாக் காய்காய்க்கும்
    கோபாலன் பெற்றபொண்ணு
        குழந்தையிலே கொல்லலாமா?

1

முந்திரிப் பழம்பழுக்கும்
        முன்னால் குலைசாயும்
    முகத்துக்கு முன்னாலே
        முண்டைக்கொடி ஆகலாமா?           
  

2

கத்திரிப் பூப்பூக்கும்
        காசுபோலக் குலைசாயும்
    கண்ணுக்கு முன்னாலே
        கருங்கொடி ஆகலாமா?

3

*       *       *

கண்ணு புளியமரம்
        கைகாட்டி ஆலமரம் - நீ
    கைகாட்டி வச்சஇடம்
        கனத்தகொடி ஆகலையே!
  

1

பொன்னு புளியமரம்
        பொய்காட்டி ஆலமரம் - நீ
    பொய்காட்டி வச்சஇடம்
        பெரியகொடி ஆகலையே!

2

*       *       *

தாழை மலைஓரம்
        தங்கியிருக்கப் போனாலும்
    தாழைமுள்ளுக் குத்துறது
        தங்கியிருக்க முடியலையே!

1