பக்கம் எண் :

தங

284

மலையருவி

தங்க மலைஓரம்
        தங்கியிருக்கப் போனாலும்
    தங்கமுள்ளுக் குத்துறது
        தங்கியிருக்க முடியலையே!
   

2

பொன்னு மலைஓரம்
        பொழைத்திருக்கப் போனாலும்
    பொன்னுமுள்ளுக் குத்துறது
        பொழைத்திருக்க முடியலையே!          
  

3
        * *       *

வேலிமேல் கற்றாழை
        வெண்கலமோ என்தாலி
    விடியற்காலம் கழற்றலாமோ
        வேண்டியஜனம் பார்க்கலாமோ!
  

1

கல்லின்மேல் கற்றாழை
        கற்பூரமோ என்காதலி
    காலையிலே கழற்றலாமோ
        கழன்றஜனம் பார்க்கலாமோ!        
      

2
            * *       *

கல்லுமேல் கல்லடுக்கிக்
        கயிலைமலை போனாலும்
    கல்லும் சறுக்கிச்சே
        கயிலைமலை எட்டலையே!

1

ஏணிமேல் ஏணிவச்சு
        யமுனைக்கரை போனாலும்
    ஏணி சறுக்கிச்சே
        யமுனைக்கரை எட்டலையே! 
           

2
            * *       *

அரிசியை மடியில்கட்டி - நான
        ஆத்திலே இறங்கினாலும்
    அரிசியும் நனையலையே - நீங்கள்வச்ச
        ஆத்திரமும் தீரலையே!

1
            * *       *