பக்கம் எண் :

New Page 1

புலம்பல்

285

கொள்ளை மடியில்கட்டி - நான்
        குளத்திலே இறங்கினாலும்
    கொள்ளு நனையலையே - நீங்கள்வச்ச
        கோபமும் தீரலையே!

2

குளத்தைச்சுற்றிக் கல்பொறுக்கிக்
        குதிரைக்கு லாடங்கட்டிக்
    குதிரை நெருஞ்சிமுள்ளு
        குத்துதம்மா தேகமெல்லாம்.

1

ஆற்றைச்சுற்றிக் கல்பொறுக்கி
        ஆனைக்கு லாடங்கட்டி
    ஆனை நெருஞ்சிமுள்ளு
        அப்புதம்மா தேகமெல்லாம்.
        

2
            * *       *

ஊரெங்கும் உன்சேனை - நீ
        உள்ளே பரதேசி
    நாடெங்கும் உன்சேனை - நீ
        நடுவே பரதேசி.

1

 சுற்றிநின்று மாரடிக்க - உனக்குச்
        சுற்றத்தார் மெத்தஉண்டு
    வளைத்துநின்று மாரடிக்க - உனக்கு
        வங்கிசத்தார் மெத்தஉண்டு.

2

வந்தார் அழுவினையோ - உன்
        வங்கிசத்தார் இல்லாமல்
    ஊரார் அழுவினையோ - உன்
        உற்றவர்கள் இல்லாமல்!
 

3

உற்றார் அறியாமல் - உனக்கு
        உடன்மரணம் வந்ததென்ன?
    சாதிசனம் அறியாமல் - உனக்குச்
        சதிமரணம் வந்ததென்ன?

4
            * *       *