ந
நாகப் பட்டணக் கடற்கரையில்
- நம்ம
நல்லவே ளாங்கண்ணித்
தாயாரு
ஆவணிமாசம் பதினெட்டாந்
தேதியில்
அம்மா புதுமையைப்
பாருங்கம்மா.
16
குச்சியும் குச்சியும்
பொன்னாலே - அந்த
ஆவாரங் குச்சியும்
பொன்னாலே
திருப்பத் தூரு தேவமா தாவுக்குத்
திருமுடி கூடப் பொன்னாலே.
17
புலியைக் குத்திப்
புலிவாங்கி - அந்தப்
புலிவாயைத் திறந்து
மிளகா யரிஞ்சு
சோடிப் புலிகுத்தும் நம்மண்ணன்
மாருக்குச்
சுருளு வருவதைப் பாருங்கம்மா.
18
அக்காதங் கச்சிகள்
ஏழுபே ருநாங்கள்
ஆருக்கும் அடங்காத வேங்கைப்புலி
வெள்ளிப் பிரம்பைத்தான்
கையிலே பிடித்தால்
எங்கேயும் பறக்கும்
வேங்கைப்புலி.
19
பாக்கு பட்டையிலே
சோறாக்கி - அந்தப்
பாலத்துக் குமேலே நெய்யுருக்கித்
தேக்கிலையிலே தீனிபோட்
டுத்தின்னத்
தொரைமாரு எப்போ வருவாங்களோ?
20
நடுக்காட்டுக் குள்ளே
தீயெரிய - நம்ம
நாலு துரைமாரும் தீனிதின்ன
இவள்தாண்டி மதுரை மீனாட்சி
- சீலை
இழுத்துப்போர்த் திக்கிட்டு வாறாளடி.
21
*
* *
கும்மிப் பாட்டு
பாட்டறிவும் படிப்பறிவும்
எங்கள்
பள்ளிக்கூ டத்திலே
உன்னறிவும்
ஏட்டறிவும் எழுத்தறிவும்
தந்து
எங்கள்வா யில்வந்த
சரஸ்வதியே.
1
|