|
தய
தயிருக் கூடையைத் தலையிலே
வைத்துத்
தங்கக்கம் பிச்சீலைப்
பட்டுடுப்போம்
தயிருக்கூடை தளும்பினா
லும்எங்கள்
தங்கக்கம் பிச்சீலை
மங்காது.
2
மோருக் கூடையைத் தலையிலே
வைத்து
முத்துக்கம் பிச்சீலைப்
பட்டுடுப்போம்
மோருக் கூடைத ளும்பினா
லும்எங்கள்
முத்துச்சீ லைக்கம்பி
மங்காது.
3
கும்மியடிக்கிற பெண்டுக
ளாஒரு
கோளாறு சொல்கிறேன்
கேளுங்கடி
அம்மியைத் தூக்கி மடியிலே
கட்டி
ஆழக் கிணற்றில்
இறங்குங்கடி.
4
நெல்லு விளைந்ததைப்
பாருங்கடி அம்மா
நெல்லுகள் சாய்ந்ததைப்
பாருங்கடி
நேற்றுப் பிறந்தநம் பேரப்
பிள்ளைக்கு
மீசை முளைத்ததைப் பாருங்கடி.
5
ஆற்றிலே தண்ணீர் ஓடாதா
- அம்மா
ஆரால் குஞ்சுகள் மேயாதா?
நேற்றுப் பிறந்த அத்தை
மகனுக்கு
நெற்றியிலே தண்ணீர்
பாயாதா?
6
புத்தம் புதுச்சட்டி
வாங்குங்கடி - அம்மா
பூசைக்கு முஸ்தீப்புச்
செய்யுங்கடி!
நம்ம மாமனை நல்ல தனம்பண்ணி
நல்ல ரூபாயைத் தட்டுங்கடி.
7
சித்திரை மாசத்து வெய்யிலிலே
- என்னை
விட்டுட்டுப்
போனாயே பர்த்தாவே!
பிள்ளை பிறக்கவும் பல்லு
முளைக்கவும்
பேர்வைக்க வந்தாயோ ராசாவே?
8
ஓடுறதண் ணீரைக் குறுக்காட்டி
- ஒரு
மல்லிகைச் செடியை
வளரவைத்துக்
கூடு குலுங்க ரதங்குலுங்க -
அம்மா
கூடப் புறப்பட்டாள்
பொம்மியம்மா.
9
|