|
ம
மலையைச்சுற் றிநல்ல கூடாரம்
- அங்கே
வந்து இறங்குதாம் பட்டாளம்.
பட்டாளத் தைச்சுற்றி
யிருக்கிற ஜனங்கள்
பட்டாளத் தையெல்லாம்
வாழ்த்தினார்கள்.
10
அவலு பெருத்தது ஆர்க்காடு
- நல்ல
வெல்லம் பெருத்தது
வேலூரு.
பணம்பெ ருத்தநீ லகிரிக்கு
நீங்கள்
பரந்து பாவாடை போடுங்கடி.
11
வந்துஇவ் வளவு நேரமாச்சு
- அம்மா
வள்ளித்தா யேஉங்கள்
வாசலுக்கு
காணிக்கை இருந்தால் தந்திடுங்க
நாங்கள்
கடைவீதி யெல்லாம்
சுற்றப் போகவேணும்.
12
அரைக்காசோ அம்மா
ஒருகாசோ - அம்மா
அதுக்குத் தானா பயந்துக்கிட்டே
பெரிய கடைக்கு வந்தாயென்
றால்எங்கள்
தலையைச் சுற்றிப்
பணம் எறிவோம்.
13
அரைவெங் காயமும் சிறுவெங்
காயமும்
அடுப்பிலே போட்டுக்
கருகவச்சு
தாளித்த சட்டியை வழித்து
நக்கின
வெட்கங்கெட் டமூளி
வெளியேவா.
14
மாமரத் துமேலே ஏறிக்கிட்டு
- அடி
மஞ்சள் குளிக்கிற
சின்னத்தங்கா!
காம்பரிஞ் சுவச்ச வெற்றிலைக்
குஎல்லாம்
களிப்பாக்குக் கொண்டு வாறானடி.
15
வெள்ளிக் கிழமை ஒருநாளு
- அம்மா
வெள்ளைப் புறாமேலே
சீனிகட்டிச்
சொல்லுக் கடங்காத நம்மண்ணன்
மாரு
சொக்கவண் டிமேலே
கோலம்வாறார்.
16
வெட்டுப்பட் டார்சேசு குத்தும்பட்டார்
- அவர்
வெள்ளிப் பிரம்பால்
அடியும்பட்டார்.
பாவிக ளுக்காகப் பாடுபட்
டார் - அவர்
பாரச் சிலுவையைத் தோளில்வைத்தார்.
17
|