|
வட
வட்டப்பொட் டுகளும் வச்சுக்கிட்டு
- அந்த
வாணியப் பெண்களும்
கூட்டிக்கிட்டுச்
சொக்கவண் டிமேலே கோலம்வாறாரு
சுப்பிர மணிய சாமியாரு.
18
சாராயக் காரா சதிகாரா
- அடா
சாராயம் விற்கிற
ராமலிங்கம்!
நீகொடுத் தபட்டைச்
சாராயம் - இங்கே
நித்தமும் சண்டைகள்
வாங்குதப்பா.
19
காக்காச் சோளம் கருஞ்சோளம் - எல்லாம்
கலந்து குத்துற நாளையிலே
துடிது டித்தஎன் துள்ளுமீ சைக்காரன்
தூங்குறான் பாரம்மா தொட்டியிலே.
20
*
*
*
வள்ளியம்மை கும்மி
வாங்கடி வாங்கடி தோழிப்பெண்காள் - வள்ளி
மாமயில் பாட்டைப் படியுங்கடி.
கானலில் இருந்த மாமயிலே - கந்தன்
கண்ட கதையைப் படியுங்கடி.
1
பொன்மான்பெற் றெடுத்த கண்மணி வள்ளியைக்
கண்டார்க ளேகாட்டு வேடர்களும்
இன்பமாய் அவர்கள் எடுத்தார்கள் கையிலே
சுந்தர வள்ளி அம்மனையுந்தான்.
2
ஆணிபோல் கயிற்றை நல்லா முறுக்கி
அழகான தொட்டி ஒண்ணுஞ் செய்து
பேணி வளர்த்தார்கள் கோணா முகத்தோடே
பொன்னுக்குப் பிறந்த கண்மணியே.
3
கொஞ்சிக் குழந்தையை முத்தமிட் டுஇன்னம்
கொத்துக்கொத் தாக நகையும்போட்டு
பத்தரை மாற்றுப் பொன்னைப்போ லேரொம்பப்
பத்திர மாய்வளர்த்து வந்தார்கள்.
4
|