|
க
காதுகுத் திப்பஞ்சு தக்கைவைச்சுச்
- சின்னக்
காலுக்குக் காலாழி பீலிமாட்டி
கங்கணம் வேறே கையிலே
பூட்டிக்
கண்கள் ரெண்டுக்கும்
மையிட்டார்கள்.
5
கைக்குக் கணையாழி மோதிரமும்
- பொன்
கால்கள் ரெண்டுக்கும்
காப்புகளும்
கண்டதெல் லாம்போட்டுக்
கண்குளி ரப்பார்த்துக்
காப்பாற்றி வந்தார்
கரிசனமாய்.
6
மங்கை பெரிய மனுசியாயி
- மனம்
குன்றாமல் காலங் கழிக்கையிலே
மாரியாத் தாள்கூட மனசிரங்கி
- மழை
மட்டில்லாமல்
பொழிய வைத்தாள்.
7
வெள்ளி முளைத்திட ஓரத்திலே
- தினை
விதைக்க நல்ல நிலம்
பார்த்து
வெட்டிப் பயிரிட்டு வேலிகட்டி
- அங்கே
வேடனெல் லாங்கூடிக்
காடுசெய்தான்.
8
காடு விதைத்துப் பயிராகித்
- தினை
கதிரு வாங்கி மணிபிடித்துக்
காட்டுவெள் ளாமையைப்
பார்க்கப்பார்க்க - அவர்
கண்கள்எல் லாமே
கலங்கிப் போச்சு.
9
அண்ணன்மா ருசொல்லைத்
தட்டாமல் - வள்ளி
ஆனந்த மாவேலைக்
காரியோடே
திண்ணைமே லெப்போதும்
உட்கார்ந்து - நல்ல
தினைமாவைத் தேனோடே சாப்பிடுவாள்.
10
காட்டுத் தினைவயல்
காக்கையிலே - வள்ளி
கல்லுங் கவணும்கை
யிலேவைத்துக்
காக்காய் குருவிஎல் லாந்துரத்த
- மெத்தக்
கம்பீர மாகக்
கவணெறிந்தாள்.
11
ஆலோலம் ஆலோலம் என்றுசொல்லி
- வள்ளி
கோலா கலமாகக்
கவணெறிந்தாள்.
காட்டிலே தவஞ்செய்த நாரத
முனிதான்
கண்ணைத் திறந்துஇவ
ளைப்பார்த்தான்.
12
|