பக்கம் எண் :

பூம

296

மலையருவி

பூமி புகழும் மனோன்மணியோ - இவள்
        பூலோக ரம்பையோ பொன்மகளோ?
    பூமியில் இவளைப்போல் எவளையும் பார்க்கலை
        காமி ரதிக்குச் சரிக்குச்சரி.
    

13

பேரென்ன ஊரென்ன ஆரம்ம நீசொல்லு
        பேதைய ரேபசுங் கோதையரே!
    பூமி பிரமிக்கப் பெற்றெடுத்த - உங்கள்
        தாய்தகப் பன்பேரைச் சொல்லுங்கம்மா.
  

14

சொல்லுறேன் கேளையா மாமுனியே - நாங்கள்
        சொல்லுத் தவறாக் குறச்சாதி
    சொந்தக்கா ரரும்என்னைப் பெற்றவரும் - அந்தச்
        சேரியி லேதான்எப் போதுங்குடி.
  

15

எங்கப்பன் பேர்வந்து நம்பிராசன் - ஆனால்
        எங்கம்மாள் பேர்வந்து நங்கையம்மா
    என்பேரை எல்லோரும் வள்ளிஎன்பார் - ஆனால்
        உங்கள்பே ரைச்சற்றே சொல்லுங்களேன்.
        

16

நாடெல்லாம் புகழ்பெற்ற நாயகியே - வள்ளி
        நாரதன் என்பேரு கேளுங்கம்மா.
    நான்வந்து மேல்லோகம் பூலோகம் எல்லாத்தையும்
        நடுநடுங் கவைக்கச் சத்திருக்கு.

17

கேளுங்கம் மாவள்ளிப் பசுங்களி யே உன்னைக்
        காணக்கந் தசாமி காத்திருக்கார்.
    கோடானு கோடித்தே வர்களெல் லாம் - அவரைக்
        கொண்டு பணிவாரே தண்டனிட்டு.
     

18

வேத முனிசிவ ஞானத்தி லேஎன்று
        மெத்தப் பெரியவ னாமதித்தேன்
    நாதாரி நாயைப்போல் நீஇப்போ தென்னிடம்
        நங்கு விகடமும் பண்ணவந்தாய்.

19

கந்தனைக் கூடிக் கலந்தத னால்உனக்குக்
        கனக்குறை வாகுமோ, குறமகளே!
    கபடமா நீஇப்போ கண்ட படிபேசிக்
        கந்தனைப் பழிக்காதே கண்மணியே!

20