பக்கம் எண் :

New Page 1

கும்மி

297

வேதத்தி லேசிறந் தமுனி யேஉன்றன்
        வித்தைகள் என்னிடம் செல்லாதேடா!
    பேதையைப் போலநீ பேய்க்குணத் தோடிப்போ
        பெண்ணான என்னைஏ மாற்ற வந்தாய்.

21

எங்கே பார்த்தாலும் உங்கள் குறச்சாதி
        ஏமாற் றிக்கிட்டுத் திரியலையா?
    தங்க மயமான கந்தனை இப்போநீ
        தாறுமா றாகவே பேசுறியோ?
          

22

துள்ளுறமாடு பொதிசுமந் தகதை
        எள்ளள வாவது கேக்கலையோ
    கள்ளனென் றுஎன்னைக் கண்டபடிநீயும்
        கல்கருங் கல்லைப்போல் பேசாதேம்மா.       
    

23

ஆர்சொன்னார் இப்புத்தி நாரத னேநீயும்
        ஆண்பிள்ளை யைப்போலப் பேசுறையே
    அண்ணன்மார் இப்பவே வந்திங்கே உன்னையே
        ஆட்டைப்போல் உரிப்பார்கள் நாரதனே.

24

வால சரவண வேலன் உனக்கேற்ற
        மாப்பிள்ளை தான்வள்ளி நாயகியே
    மங்கிலி யம்இப்ப வேஉனக் குமாட்டி
        மாலை யிடநல்ல வேளையிது.
             

25

மெத்தப் படித்தசந் யாசிஎன் றாய் - இப்போ
        சத்தம்போ டாமேநான் சும்மாருக்கேன்.
    பத்தினி என்னைப் புத்திமா றாட்டவேநீ
        பதுங்கி வந்தாயாடா பாதகனே?

26

ஆனை புலிகரடி எல்லாம் பயப்படும்
        அண்ணன்மார் ஏழுபே ரும்வருவார்.
    அநியாய மாகநீ அவதிப் படுவாயே
        அப்புறம் என்மேலே வருத்தம் வேண்டாம்.     
    

27

நல்ல சுபமுகூர்த்த நாளிலே உன்னை
        நாதன் சிவகிரி வேலனுமே
    நம்பிக்கை யாஉன்னை மாலையிடும்போது
        நாரதன் வேடிக்கை பார்க்கப்போறேன்.

28