பக்கம் எண் :

298

மலையருவி

வீண்சம் பிரதாயம் பேசாதே நாரதா
        வேறேவே லைஉனக் கில்லையோடா
    வேசியென்று நீஎன்னை வீணாக நினைத்துப்
        பேசத் துணிந்தாயா நாசகாலா?
        

29

எந்தவி தஞ்சொல்லி யும்வள்ளிப் பெண்ணுக்குச்
        சம்மதம் இல்லைஎன்று முனிதிகைச்சு
    மந்த மனசை மயக்க முடியாமே
        வானமும் பூமியும் பார்த்துநின்றார்.

30

நாரத முனிவன் நாயகி வள்ளியை
        நயந்து கேட்டும் முடியாததால்
    வேறொரு தந்திரம் செய்யவே யோசித்து
        வேடர்காட் டைவிட்டுத் தூரப்போனார்.

31

வள்ளியைப் போலொரு படம்வ ரைஞ்சு - அதற்கு
        வர்ணப்பூச் சுகளெல் லாம்பூசி
    வள்ளைத்தண் டைப்போலக் காதெழுதி - அதில்
        வச்சிரத் தொங்கல் முருகெழுதி
       

32

செண்பகப் பூவைப்போல் மூக்கெழுதி - அதில்
        சிங்கார முக்குத்தி தானெழுதி
    செல்வரா சாத்திபல் லும்எழுதி - பின்னே
        செக்கச் செவேலென் றுதடெழுதி   
               

33

கண்ணகி யைப்போலே கண்ணெழுதி - அந்தக்
        காம ரதிகழுத் தும்மெழுதி
    கால்கைஎல் லாத்தையும் சேர்த்தெழுதி - அதில்
        கெண்டைமீன் தாமரைப் பூவெழுதி   
        

34

எல்லா வற்றையும் எழுதிமுடிச்சு - முனி
        வள்ளி யழகையும் பார்த்தபோது
    எல்லா உலகமும் படைத்தநா தன்கந்தன்
        எங்கென்று தேடித் திரிந்தானே.

35

காடுமே டெல்லாம் கடந்துபோய்க் கடைசி
        கந்தன் வீடுபோய்ச் சேர்ந்தான்முனி
    கந்தனைக் கண்டிட்டுக் காலிலே விழுந்து
        கையிலே கொடுத்தான் படத்தைத்தானே.   
         

36