பக்கம் எண் :

கந

கும்மி

299

கந்தன் கையிலே படத்தைவாங் கிக்கொண்டு
        கண்ணிரண் டும்நன்றாய்த் துடைத்துப்பார்த்துக்
    காமம்மீ றித்தலைக் கேறிப்பித் துப்பிடித்துக்
        கட்டிலி லேகதறி விழுந்தழுதான்.

37

கண்ணேபெண் ணேபொன்னே வள்ளி வள்ளியென்று
        கையிலே படத்தைப் பிடித்துக்கொண்டு
    கண்ணைச் சிமிட்டாமல் காதலோ டேபார்த்துக்
        கண்கலங் கிநின்றான் கந்தன்தானே.

38

கட்டிப் பிடித்துச்சேர மாட்டாயோடி - என்
        காதலைக் கண்டும் உருகாயோடி?
    கட்டிக் கரும்பே கனியே மணியே - என்
        கவலையைத் தீர்க்கமாட்டா யோடிநீ?        
   

39

பெண்கொடி யேபசுந் தங்கமே நீசற்றே
        பேசினால் வாய்முத்தம் சிந்திடுமோ?
    என்மேல் உனக்கென்ன கோபஞ்சொல் கண்மணி
        ஏங்கி யிருக்கேனே உன்மேலேநான்.
  

40

சித்தம் இரங்கி உருகமாட் டாயோ - நான்
        செத்தாலும் உன்னை மறக்கமாட்டேன்
    சத்திய மாஉன்னைப் பாதுகாப் பேன் - என்னை
        நிச்சய மாநம்பு நேசக்கண்ணே.
      

41

வாய்திறந் துபேசு அம்மா ளே - இந்த
        வம்பெல்லாம் செய்யாதே பொன்மானே!
    நோயெனக் குவந்து நொந்துபோ னால் - நான்
        நீதான் காரணம் நீலக்குயிலே.
                

42

பித்துப் பிடித்த மனிதனைப் போல்கந்தன்
        இப்படி யெல்லாம் கதைபேசி
    எப்படி யும்வள்ளி யம்மையைத் தேடிக்
        கட்டவே ணும்மென்று சபதஞ்செய்தார்.

43

கந்தன் முதல்தாரம் தெய்வா னையம்மா
        கண்டு பிடித்தாள் சங்கதி யெல்லாம்
    வந்த வுடனே நாரதனைப் பார்த்தவள்
        கண்ட படியாக் குடைகுடைந்தாள்.
           

44