பக்கம் எண் :

அன

300

மலையருவி

அன்னைதெய் வானையே கேளுங்கம் மாகொஞ்சம்
        அடியேன் மேலொரு குற்றம்இல்லை
    ஆகாசம் பூமியும் பாதாள மும்சாட்சி
        அம்மணி வள்ளியைக் காட்டில்கண்டேன்.       

45

தேவரெல் லாம்பணி யுங்கந்த சாமியைத்
        தேடியே நானிங்கே ஓடிவந்தேன்
    தேவிவள் ளியைக்கண்ட தைத்தவிரநான்
        வேறொன்றும் அவருக்குச் சொல்லலையே.
          

46

உண்டவீட் டுக்குநீ ரெண்டகம் செய்தாயே
        ஓகெடு வாய்பாவி நாரதனே!
    உள்ளாக நீயுந்தான் இல்லாமல் இருந்தால்   
        ஒன்றும் நடக்காதே பாதகனே.

47

இத்தனை யுஞ்செய்து கத்திரி நட்டவன்
        இல்லேண்ணு எங்கிட்டே சொல்லவந்தாய்
    இதைநீ ஒருகதை மாதிரி சொன்னாலும்
        ஏமாந்து போவேனோ நாறல்நாயே?
          

48

கோள்குண் டுணிசொல்லிக் குடியெல்லாம் கெடுக்கிற
        கொலைகாரன் உன்னைப்போல் யாருமுண்டோ
    குறவள்ளி யைப்போலே படம்ஒன்று வரைந்து
        கொடுக்கவில் லையோடா கந்தனுக்கு?

49

தொட்டியை ஆட்டித் தொடையை அறுக்கிற
        புத்தியைத் தானடா நீகாண்பித்தாய்
    சத்தியம் மேலேநீ சத்தியம் செய்தாலும்
        சந்தேகம் தீராதென் நெஞ்சைவிட்டு.

50

தந்திர மாஎன்றன் கந்தசா மிக்குத்
        தந்தவன் நீதான டாபடத்தை
    இங்கிருந் திப்போதே போகாவிட் டால்நீ
        ஈக்கும்நாய்க் கும்இரை யாத்தான் போவாய். 
     

51

பஞ்சணை மெத்தைமேல் படுத்தே உறங்கின
        கந்தனைத் தெய்வானை யும்பார்த்து
    கந்தரே வள்ளியைக் கட்டணு மென்றுதான்
        இந்த மாதிரி உறங்கிறேண்ணாள்.

52