என
என்னை விடவள்ளி பெரியவ
ளோபின்னே
எதனாலே அவள்மேலே
காதல்கொண்டீர்
எதுக்கு நீங்கள்போய்ப்
பார்த்துவாங் கஆனால்
என்னைப் பற்றிக்
கவலை வேண்டாம்.
53
தாகந் தெளிந்து மனங்குளிர்ந்
துகந்தன்
தழுவிமுத் தமிட்டான்
தெய்வயானையை
தேனேமா னேதெய்வ யானைஉன்
முகத்தைத்
தெரிசிப்பேன் திங்களி
லென்று சொன்னான்.
54
வள்ளி யிருக்கும் தினைக்காட்டுக்
குஇப்போ
வழிதெ ரியலை நாரதனே!
எந்த வழியில்நீ வந்தாயோ
அதிலே
என்னையும் கூட்டிப்போ
நாரதனே.
55
வேடரா சன்போலே
வில்லும்அம் பும்வைத்து
வேல்முரு காதலையில்
முடியும்வைத்து
ஆனைமே லேநீங்கள் அம்பாரி
யும்வைத்து
அடிமையை நம்பியே
வாங்கசாமி.
56
அப்படி யேகந்தன் வேடக்கோ
லங்கொண்டு
ஆறு முகத்தையொரு முகமாக்கி
அம்பையும் வில்லையும்
அரையி லேசெருகி
ஆனைமேல் ஏறித்தான் போனாரே.
57
கந்தனும் நாரத னும்வழி
கூடியே
காடு மலையெல்லா மேகடந்து
கன்றுக்குட் டிதினைக் காட்டைக்காத்
துவந்த
கண்மணி வள்ளியைக்
கண்டார்களே.
58
கண்ணுக்குள் ளேநின்ற காம
ரதிஉன்மேல்
காதல்கொண் டேனடி
மாமயிலே
கண்ணே பசும்பொன்னே இப்போதென்
னைநீயும்
கட்டி ஒருமுத்தம் தரமாட்டையோ?
59
மாரன்விட் டகணை மாரைப்
பிளக்குது
மாதே உனக்கு மனம்இல்லையோ
மன்மத னைப்போலே உன்னைத்தே
டிவந்தேன்
இன்னும்என் கூடநீ ஏன்பேசலை?
60
|