பக்கம் எண் :

ஆற

336

மலையருவி

ஆற்றிலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே
    குளத்திலேயும் தண்ணியில்லை - ஓ சாமியே
    கிணற்றில் பார்த்தால் உப்புத் தண்ணி - ஓ சாமியே
    கிழடு கட்டை குடிக்குந் தண்ணி - ஓ சாமியே
    தண்ணித்தாகத் தால்வறண்டு - ஓ சாமியே
    தவறினது கோடி சனம் - ஓ சாமியே
    கஞ்சியில்லா மேதவித்து - ஓ சாமியே
    காட்டிலே மாண்டது கோடி - ஓ சாமியே
   

20

கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஓ சாமியே
    அன்புடனே சலுக்கார்தானே - ஓ சாமியே
    காலம்பர கோடி சனம் - ஓ சாமியே
    கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஓ சாமியே
    பொழுது சாயக் கோடி சனம் - ஓ சாமியே
    பொழைச்சுதே உசிர் தப்பித்து - ஓ சாமியே
    கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஓ சாமியே
    காணத் துவையல் கொடுத்தாங்களே - ஓ சாமியே.

_________

தொதுவர் பாட்டு

மலைநாட்டு வளப்பங்களை
        மன்னர்களே சொல்லுறேன்கேள்.
    இப்பச் சொல்லும் கதைகள் மெத்த
        அற்புதமாய்த் தானிருக்கும்.
    செம்மையாச் செவிகொடுத்து
        மன்னர்களே கேளுமையா.
    நீலகிரி மலையிலொரு
        பாதைவழி போகையிலே
    பாதையோரம் இருந்தரெண்டு
        கூரைவீட்டைக் கண்டேனையா.

5

கூரைவீட்டைப் பார்க்கையிலே
        குடியிருக்கும் ஆளு இல்லை.
    வீட்டைச் சுற்றி வளைஞ்சிருக்கும்
        பூண்டுகளைச் சொல்லுறேன்கேள்.