பக்கம் எண் :

New Page 1

338

மலையருவி

வெட்கஞ் சிக்கி இல்லாமலே
        வெளியே வந்து நின்னாங்களே.
      

25

இப்படிக்கொத் தவங்களைநான்
        எப்படியோ கண்டுக்கிட்டு
    என்மனசைத் திடப்படுத்தி
        நான்அவுங்க பக்கம் போயி
    ஐயாநீல கிரிக்குப் போற
        பாதை எந்தப் பக்கமிண்ணேன்.
    அவங்க வாயி திறக்கவில்லை
        மறுவார்த்தையும் பேசவில்லை.
    அவுங்கபாசை யாலே என்னைப்
        பலவி்தமாப் பேசினாங்க.
          

30

ஐயையோ பாவம் இது
        ஆர்பெற்ற பிள்ளைகளோ?
    மானம் போன வுடனேபெரும்
        பாவமிண்ணு நான்நெனச்சு
    இந்தத்தர் மத்தை நெனைச்சு
        அந்தப் பொண்ணுக் கிட்டே போயி
    அங்கவஸ்தி ரத்தை எடுத்து
        மங்கைமேலே போர்த்தி விட்டு
    இந்த மட்டும் போதுமையா
        வந்த ரொக்க மின்னு சொன்னேன்.

35

அப்போ தெல்லாம் கூடிக் கிட்டு
        தப்புத் துப்புண் ணடிச்சா ரென்னை.
    அதென்னான்னா சங்கதி யின்னு
        மன்னர்களே சொல்லு றேன்கேள்.
    புன்னங் கொட்டை யிலேபாதி
        புளியங் கொட்டை யிலேபாதி   
    கொட்டைகளை வில்லில் வச்சுக்
        கெட்டியாய் அடிச்சா ரென்னை.
    அவுக அடிச்ச அடிகளெல்லாம்
        தவறா மெத்தான் பட்டதையா.

40

அந்தஅடிக் குப்பயந்து
        அசைஞ்சுநான் வழிநடந்தேன்.