பக்கம் எண் :

பல கதம்பம்

339

காபிக் கொட்டை பழம்பழுக்கும்
        தோப்புவழி யாநடந்தேன்
    ஈச்சஞ்செடி ஓரமாக்கை
        வீசிக்கிட்டுப் போகையிலே
    அங்கே இருந்த குடுவையிலே
        கள் நிறைய இருந்ததையா.
    எனக்கிருந்த தாகத்தாலே
        எடுத்தேஅதைக் குடிக்கப் போனேன்.

45

கண்டானே கவுண்டன்அவன்
        கொண்டுவந்தா னேதடியை
    லட்சம்பொன் வராகன்நகை
        லட்சணமாப் போட்டதைப்போல்
    உச்சந் தலைதொடங்கி
        உள்ளங்கால் மட்டுமடிச்சான்.
    அப்போதென் தேகமெல்லாம்
        எப்படி இருந்து துண்ணால்
    வலியவந்த வண்டிக் காளைக்கு
        வம்பாச் சூடுபோட்டாப் போலே.
   

50

கள்ளுக்காரன் புண்ணியத்திலே
        கண்ட மட்டும் குடித்தேனையா.
    இத்தனை அதிசயத்தை
        சிற்றடியான் கண்டுக்கிட்டு
    அத்திபுரம் போனேனையா
        அங்கே கொஞ்சம் நின்றேனையா.
    அத்திபுரம் பட்டணத்திலே
        ஆலமரம் ஒண்ணிருக்கு.
    ஆலமரத் தடியிலேநான்
        அசந்துபடுத் துறங்கினேனே.
          

55

அங்கேஒரு பெண்சிறுக்கி
        தங்கக்குடந் தானெடுத்து
    அரைக்குடத்து மோரெடுத்து
        நிறைகுடத்தைத் தலையில் வச்சு
    மோரோமோர் என்று சொல்லி
        மோர்விலையைக் கூறி வந்தாள்.