பக்கம் எண் :

பல கதம்பம்

341

சிங்காரமா வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்.
                  

5

பெரிய கப்பல் மேலே ஏறி
        இந்த வெள்ளைக் காரன்
    பெருமை யோடே வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்.
    

6

ராவிலே வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்
    ராச்சியங்க ளைப்பிடிக்க
        இந்த வெள்ளைக் காரன்.
      

7

கோழி கூப்பிட வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்
    கோட்டை யெல்லாம் தான்பிடிக்க
        இந்த வெள்ளைக் காரன்.
    

8

காலம்பர வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்
    காடு மலை யைப்பிடிக்க
        இந்த வெள்ளைக் காரன்.
                  

9

மதியத்திலே வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்
    மலைகள் மேலே கோட்டை கட்ட
        இந்த வெள்ளைக் காரன்.

10

முதல் சாமம் வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்.
    மூணு ராச்சி யம்பிடிக்க
        இந்த வெள்ளைக் காரன். 
                    

11

ரெண்டாஞ் சாமம் வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்
    ரெண்டு ராச்சி யம்பிடிக்க
        இந்த வெள்ளைக் காரன்.

12

மூணாஞ் சாமம் வாறானையா
        இந்த வெள்ளைக் காரன்
    முஸ்தீப் பாகக் கொடியும் ஏற்ற
        இந்த வெள்ளைக் காரன்.
         

13

சென்னையிலே சேர்ந்தா னையா
        இந்த வெள்ளைக் காரன்