பக்கம் எண் :

ஆண் பெண் தர்க்கம்

65

வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                    சேரடா ஆ ஆ.

27

அண்ணன்மார் இங்கே வந்து
        அமளிஏதும் செய்தால்நான்
    அத்தாசமா உன்னைத் தூக்கி
        ஆகாசமாய்ப் பறந்திடுவேன்
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                        அன்னமே ஏ ஏ.     
       

28

அத்தாசமா என்னைத் தூக்கி
        ஆகாசமாப் பறந்தா யிண்ணா
    பூமிக் குள்ளே நான்நுழைந்து
        புல்லா முளைத்திடுவேன்
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.    
           

29

பூமிக்குள்ளே நீநுழைந்து
        புல்லா முளைச்சை யிண்ணா
    காராம்பசு வேசங்கொண்டு
        கரும்பிடுவேன் அந்தப்புல்லை
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                        அன்னமே ஏ ஏ.     
       

30

காராம் பசுவா நீவந்து
        கரும்பினாலும் அந்தப் புல்லை
    ஊர்க்குருவி வேசங் கொண்டு
        உயரப் பறந்திடுவேன்
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.
                

31