உங
உங்கப்பன் போட்ட
சோற்றிலேயா - குட்டி
உங்கம்மா போட்ட
சோற்றிலேயா
அதைப்பெனக்கு ஏறிப்
போச்சு - குட்டி
ஆணவமும் மிஞ்சிப் போச்சு?
5
வாங்கிக் குடிச்சுப் பிழைத்தவனே
- பையா
வழியைப் பாத்துப்
பிழைத்தவனே
மூஞ்சி வீங்கிப் போனவனே
- பையா
முகத்தி லுனக்கு மீசை
யேண்டா?
6
சாணிச் சட்டியிலே சோறு
தின்னு - குட்டி
சந்தனப் பொட்டும்
வச்சுக் கிட்டுச்
சளுக்குப் புளுக்கின்னு நடந்து
விட்டால் - உன்னைச்
சட்டை யாரடி பண்ணப்போறா?
7
மானங்கெட்ட மாட்டுக்
காரா - அடா
மரியாதை கெட்ட
பிச்சைக் காரா
மயிரைப் பிடிச்சு வளைச்சுக்
கிட்டு - உன்னை
மாற்றாலே வாங்கி
விட்டுடுவேன்.
8
தலைதெறிச்ச தட்டு வாணி
- அடி
தலைகீழா விழுகாதடி
தட்டுவேன் பல்லை யெல்லாம்
- குட்டி
தப்பிச்சுநீ ஓடிவிடடி.
9
போடா போடா பேடிப் பையா
- அடா
பொழப்பில்லாத பொட்டைப்
பையா
வாய்என் னடா நாய்க்குட்டியே
- அடா
வம்பாய்உதை வாங்கா
தேடா.
10
பொட்டை பொட்டை
யின்னி யின்னா - அடி
பொட்டை சமத்தைக்
காட்டணுமா
வட்டக் காட்டுக்கு வந்தி
யின்னா - உன்னை
வட்டம் போட வைக்கி றேண்டி.
11
|