|
சம
சம்மங்கி எண்ணெய் வேணும்
சைனாப்பட்டுச்
சீலைவேணும்
பம்பாய்ச் சோப்புவேணும்
- என் திலகமச்சானே
பயாஸ்கோப்பு
ராவுக்கேவேணும் - எங்குலகமச்சானே.
5
கூனற் கிழவிமுண்டை
குடிகெடுக்கும் லண்டிமுண்டை
வீணாசை வைக்காதடி - என்
ஆசைக்கண்ணாட்டி
வீரியங்கள் பேசாதடி
- என்நேசக்கண்ணாட்டி.
6
கிழவி கிழவியிண்ணு
கேவலமாய்ப்
பேசுறாயே
கிழவியாநான் என்னைப்பாரு
- என் திலகமச்சானே
குளவிஉன்னைக் கொட்டிடாதோ
- என்குலகமச்சானே.
7
பெண்ணேஎன் கண்மணியே
பிரியமுள்ள பொன்மணியே
சொன்னேன்நான் கேலிக்காக
- என் ஆசைக்கண்ணாட்டி
கோவமா இருக்காதடி -
என் நேசக்கண்ணாட்டி.
8
ரோசாப்பூச் செண்டுவேணும்
ரோசாப்பூ வேறேவேணும்
ராசாராணி போலிருந்து -
என்திலகமச்சானே நாம்
ரெண்டுபேரும் போகவேணும்
- எங்குலகமச்சானே.
9
தேனே இளங்குயிலே
செங்கரும்பே சர்க்கரையே
மானே மரகதமே - என்
ஆசைக்கண்ணாட்டி உன்
மனம்போலக்
கொண்டுவந்தேன் - என்நேசக்கண்ணாட்டி.
10
|