பக்கம் எண் :

ம

70

மலையருவி

மாமா மருக்கொழுந்தே
        வாழை இளங்குருத்தே
    ஏமாற்றிக் கொண்டுவந்த - என் திலகமச்சானே உன்
        இஷ்டம்போல வாறேன்இனி - என்குலகமச்சானே.    

11

மாமாண்ணு கூப்பிட்டுக்கிட்டு
        மல்லிகைப்பூ வச்சுக்கிட்டுக்
    கோயிலுக்குப் போறாயோடி - என் ஆசைக்கண்ணாட்டி
        கூட நடந்துவாடி - என் நேசக்கண்ணாட்டி.  
     

12

ஆசைப் புருசனே
        அலங்காரம்நான் செய்தேனே
    பேசலையே என்கிட்டே - என் திலகமச்சானே
        மோசம்பண்ணப் பார்த்துட்டையே-என்குலகமச்சானே.
   

13

கோயிலுக்குப் போனபிறகு
        கொண்டுவந்து தாரேண்டி
    சாமிவற நேரண்டி - என் ஆசைக்கண்ணாட்டி நீ
        தாமசித்தால் மோசம்போச்சு-என் நேசக்கண்ணாட்டி.    

14

தளுக்கு நடைக்குநான்
        தங்கச்சங்கிலி வாங்கித்தாறேன்
    குலுக்கி நடந்துவாடி - என் ஆசைக்கண்ணாட்டி
        குருநாதன் சந்நிதிக்கு என் நேசக்கண்ணாட்டி.        

15

பூக்கடைக்கு முதல்முதல்போய்ப்
        பூச்செண்டு வாங்கவேணும்
    கோட்டைக்குள்ளே போகவேணும் - என் திலகமச்சானே
        கொண்டைக்குள்ளே வைக்கவேணும்-என் குலகமச்சானே.   

16