|
வ
வாங்கிக்கிட்டு வந்தேண்டி
வஞ்சகம் இல்லாமலே
ராங்கிஇனிப் பண்ணாதேடி
- என் ஆசைக்கண்ணாட்டி
நடந்துவாடி தொடர்ந்தாற்போலே-என்
நேசக்கண்ணாட்டி.
17
ஓடும் ஜோடி
சும்மா சும்மாப் பார்த்துக்கிட்டுச்
சொகுசுநடை நடந்துக்கிட்டுக்
கம்மால்ரொம்பக் காட்டிக்கிட்டு
கணக்காப்போகும்
கறுத்தபெண்ணே.
1
ஆருண்ணு நெனச்சுக்கிட்டு
அம்புட்டுப் பேசவந்தாய்
பேரெடுத்த
போக்கிரியின்
பெண்டாட்டி நானுபாரு.
2
அண்ணைக்குச் சொன்னசொல்லு
அம்புட்டையும் மறந்திட்டையோ
கண்ணாட்டி உன்னாலே
கலங்குறேண்டி இந்தவேளை.
3
மூட்டைமுடிச்சுக் கட்டிக்கிட்டு
மொத்தரூபா எடுத்துக்கிட்டு
ரோட்டுவழி போறபோது
புருசன்பார்த்தால்
என்னசொல்வேன்?
4
உன்புருசன் வல்லவனோ
உஸ்தாதியோ குஸ்திக்காரனோ
ஓட்டம் பிடிக்கலாண்டி
ரெங்கோன் கப்பற்
குள்ளேஏறி.
5
எத்தனையோ கோடிஜனம்
இம்சைப்பட்டார் பெண்களாலே
சத்தியமாய்ச்
சொல்லுறேன்நான்
பத்தினிதான் உண்மையிலே.
6
|