|
கத
கத்தியாலே வெட்டினாலும்
கண்டதுண்டம் ஆக்கினாலும்
பத்தினியே உன் ஆசையைச்
செத்தாலும் மறக்கமாட்டேன்.
7
கட்டுக் ககப்பட்டவன்
கண்டுட்டால் என்புருசன்
எட்டி உதைச்சிடுவான்
என்னையும் உன்னையும்
சேர்த்துக்கட்டி.
8
கண்ணுக்குத் தெரியாமே
கம்பிஜல்தி நீட்டிடுவோம்
ரெங்கோன் கப்பல்ஏறிக்
கடலைத்தாண்டிப் போயிடுவோம்.
9
காரியம் ஆகுமட்டும்
காலைநீ பிடிச்சுகிட்டு
வீரியமாய்ப் பேசிவிட்டால்நான்
வீணாஅதை நம்புவேனா?
10
வீரியமா நான்பேசலை
காரியமாத் தான்பேசுறேன்
பேருகெட்டுப் போறாப்பலே
ஒண்ணும்நானு பேசவில்லை.
11
என்னதான் நீசொன்னாலும்
ஏமாந்து போகமாட்டேன்
பொன்னான என்புருசன்
என்னசெஞ் சான்எனக்கு
12
கலங்காதே கைவிடலை
காளிகோயில் முன்னாலே
கற்பூரத்தை உனக்குமுன்னே
கைபோட்டு அணைச்சிடுவேன்.
13
____________________________________________________
பா-ம். 8. கண்டுட்டால் சொந்த நாதன்.
|