|
உற
உற்றார் உறமுறையார்
ஊரைவிட்டு ஓட்டிடுவார்
பற்றாக் குறைக்குஎன்
பல்லெல்லாம் உடைச்சிடுவார்.
14
உற்றார் உறமுறையார்
உன்னைக்குத்தம் சாட்டமாட்டார்
உன்புருசன் நான்இருக்க
உனக்கேண்டி அந்தப்பயம்?
15
நாடெங்கும் இழுத்துக்கிட்டு
நம்பிக்கையா நடந்துக்கிட்டுப்
பாதியில்நீ விட்டோடினால்
பாவிநானும் என்னசெய்வேன்?
16
நாடெல்லாம் இழுத்துக்கிட்டு
நாயைப்போலத் திரியமாட்டேன்
நான்உனக்கு நாடுவாங்கப்
பணமுங்கூடத் தந்திடுவேன்.
17
எட்டுமெத்தை வீடுவேணும்
எண்பதுவேலைக் காரர்வேணும்
தட்டாமல் செலவுபண்ணத்
தாராளமாப் பணமும்வேணும்.
18
ஆடிமுதல் தேதியிலே
அம்மன்சந்நிதிக்
கோயிலிலே
ஆணையிட்டுக் கொடுக்கிறேண்டி
அழகான மாமயிலே.
19
அப்பண்ணா நான்வருவேன்
எப்பக்கம் கூப்பிட்டாலும்
ஆகாயக் கப்பலிலே
ஏறிவரச் சொன்னாலும்.
20
___________________________________________________
20. அப்பண்ணா -
அப்போதென்றால்.
|