பக்கம் எண் :

நத

74

மலையருவி

நத்திநீ வந்தியிண்ணா
        நான்உன்னைக் காப்பாத்துவேன்
    பத்தினியே உன்னைநான்
        நித்தமும் களிக்கச்செய்வேன்.
          

21

இச்சைக் கிசைந்தசிறு
        இன்பமுள்ள தங்கமாமா
    இச்சணமே புறப்படலாம்
        இங்கிலாந்து தேசத்துக்கு.
            

22

காளைமாடு

பொழுதுசாயும் நேரத்திலே
        புலிஅலையும் காட்டுக்குள்ளே
    தலைசாஞ்சு தவிக்கிறையோ - தங்கரத்தினமே, உன்
        தலைவிதியைச் சொன்னால்என்ன - பொன்னுரத்தினமே.
  

1

மாடடையும் நேரத்திலே
        காளைமாட்டைக் காணாமின்னு
    மாற்றாந்தாயி அடிக்கவந்தாள் - தங்கமாமாவே, நான்
        ஓடிவந்தேன் உடல்நடுங்க - பொன்னுமாமாவே.    

2

கோடைமழை பெய்யுதடி
        குலையெல்லாம் நடுங்குதடி
    கூசாமல்நீ என்பிறகே - தங்கரத்தினமே, ஓடிக்
        குடிசைக்குள்ளே வந்திடடி - பொன்னுரத்தினமே.      

3

கண்ணழகும் கட்டழகும்
        கழுத்தழகும் கொம்பழகும்
    பொன்னான காளைமாட்டைத் - தங்கமாமாவே, நான்

        கண்ணாலே கண்டால்போதும் - பொன்னுமாமாவே.
                   

4