பக்கம் எண் :

New Page 1

ஆண் பெண் தர்க்கம்

75

கோடிகோடி காளைமாடு
        என்கிட்டே இருக்குதடி
    கோவமில்லா மேவாடி - தங்கரத்தினமே, உனக்குக்
        கொடுக்கிறேன் அதிலேஒன்னு - பொன்னுரத்தினமே.      

5

உன்காளை என்னத்துக்கு
        ஊரார்காளை என்னத்துக்கு
    என்காளை எனக்கிருந்தால் - தங்கமாமாவே, அது
        எப்பவும் எனக்குதவும் - பொன்னுமாமாவே.        

6

என்னடி மிஞ்சிப்போறே
        ஏமாந்து போகமாட்டேன்
    உன்னைப்போல ஆயிரம்பேரைத் - தங்கரத்தினமே
        உலகமெல்லாம் பார்த்திருக்கேன் - பொன்னுரத்தினமே.  

7

என்காளை இங்கிருந்தால்
        எட்டி உதைத்துக்கொல்லும்
    கிட்டவந்து பேசாதேடா - மட்டிப்பயலே, உன்னைக்
        கொண்டுபோகும் கொள்ளைநோயி - சுட்டிப்பயலே.
   

8

உன்காளை என்னசெய்யும்
        உன்சாமி என்னசெய்யும்
    உன்மாட்டைக் கொன்னுடுவேன் - தங்கரத்தினமே
        கையைச்சும்மா வீசாதடி - பொன்னுரத்தினமே.
         

9

வம்பாநீ பேசாதேடா
        வாய்ச்சாலம் பண்ணாதடா
    கொம்பாலே குத்திக்கொல்லும் - என்காளைபயலே

        உன்பாடு திண்டாட்டந்தான் - ஓடிப்போடாபயலே.
                 

10