பக்கம் எண் :

வ

76

மலையருவி

வாடாபோடாண்ணு சொல்லாதேடி
        வாயால்வந்ததைத் திட்டாதேடி
    கேடாநீ கெட்டுப்போவே - சண்டாளச்சிறுக்கி
        ஓடிநீ ஒளியாதேடி - பாழானசிறுக்கி.   
           

11

என்குலத்துத் தெய்வங்களா
        எங்கொளித்து நிற்கிறீங்க
    ஏழைமுகம் பார்த்திவனை - நாசம்பண்ணுங்களேன்
        காலிலேநான் கும்பிடுறேன் - காத்துக்கொள்ளுங்களேன்.    

12

உன்சாமி வந்திடுமா
        ஒண்ணுமில்லாமல் செஞ்சிடுமா
    நான்தாண்டி உனக்குச்சாமி - சண்டாளச்சிறுக்கி
        நல்லாநீ சொல்றதைக்கேள் - பாழானசிறுக்கி.         
 

13

சாமிகளைத் திட்டாதேடா
        சாம்பலாய்நீ போயிடுவே
    பாவிஉன் கண்அழியும் - பாழாய்ப்போனவனே, உன்
        வீடும் எரிஞ்சுபோகும் - வீம்புக்காரப்பயலே.

14

சாமிஎங்கே பூதம்எங்கே
        கோயில்எங்கே குளம்எங்கே
    சாபத்தைநீ வச்சுக்கோடி - வாயாடிமகளே, உன்னை
        சட்டினிநான் செய்திடுவேன் - சண்டாளிமகளே.         

15

தெய்வங்களே என்வருத்தம்   
        தெரிஞ்சும் ஒழிஞ்சீங்களா
    பத்தினியா நான்இருந்தால் - பக்கம்வந்திடுங்க, இந்தப்
        பாவிப்பயல் பழியைவாங்கப் - பலங்கொடுத்திடுங்க.      

16

கண்ணாட்டி கண்மணியே
        கற்புள்ளஎன் பொன்மணியே
    கண்டேனடி உன்திறத்தைத் - தங்கரத்தினமே

        காளைமாடு நான்தாண்டி - பொன்னுரத்தினமே.
                               

17