பக்கம் எண் :

New Page 1

ஆண் பெண் தர்க்கம்

77

வேடன்வேசம் போட்டுஉன்னை
        வேணுமின்னு ஏச்சுப்பார்த்தேன்
    சாமிபோல நீயிருக்கத் - தங்கரத்தினமே உன்னைச்
        சாஸ்டாங்கமாய்ப் பணிகிறேண்டி - பொன்னுரத்தினமே.  

18

தாசியின் காதல்
வாக்கு வாதம்

மாமா நீங்க வாங்க
        மங்கைக் குறுதி தாங்க
    ஏமா றுவமோ நாங்க
        சாமர்த் தியம்வே ணாங்க.
          

1

பட்ச மாக ஓடிப்
        பறந்து வந்தி யாடி
    நிச்சய மாக நாண்டி
        இல்லை டிஒரு பேடி.              
                  

2

பணப்பேய் பிடிச் சவளே
        பிணம்போல் வாய்திறப் பவளே.
    பணம்பி டுங்கிற வரைக்கும்
        பல்லை இளிப் பவளே.
              

3

பந்து உறமுறையார் கூட்டம்
        பண்ணு வாங்க திட்டம்
    பச்சி லையுடைய காட்டம்
        பையன் பிடிப்பானே ஓட்டம்.

4

தாசி யிண்ணும் வேசியிண்ணும்
        தாரா ளமாஇப் போதும்
    பேசாதீங்க மாமா
        லேசாவிட மாட்டேன் ஆமா.

5

மெருகு நகையைப் பூட்டி - உன்
        மெல்லிசுக் கையை நீட்டி - என்
    தெருவிலே வண்டி ஓட்டி - ஏன்

        திரிகிறா யடிநாய்க் குட்டி.

6