|
| |
| தூதர் சொல் வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளை யானே ஆரியப்பூ ராசனவர் ஒன்னை அதிக சீக்கிரமாய் அழைத்து வரச் சொன்னார். வாருங்கள் சேப்பிளையானே. அப்படியே மகா பாக்கியமய்யா. |
| சேப்பிளை சொல் விருத்தம் |
| “அழைத்திடும் தூதா கேளாய் |
| ஆரியப் பேந்திர மன்னன் |
| தழைத்திட அழைத்தா ரென்றீர் |
| தானுமே வாரே னென்று |
| வளர்ந்திடும் புரவி யேறி |
| மன்னவன் முன்னதாக |
| பிழைத்திட கைவாய் பொத்தி |
| புகலுரை செய்கு வாரே. |
| தூதர் ராசனிடம் சொல் விருத்தம் |
| செந்திருவை ஒத்தமதி சந்திரகுல சேகரா |
| தீரனே வெகுபறாக்கு, |
| |
| ஸ்ரீரெங்கரடி பணியும் திரிசிரகிரி மேவும் |
| செய்யகுணா வெகுபறாக்கு. |
| |
| அந்திமதி சூடிய நந்தியிடம் அருள் பெற்ற |
| ஆரியர் வெகுபறாக்கு. |
| |
| அகிலாண்ட வல்லியொரு முகில்பூண்ட சேகரா |
| அண்ணலே வெகுபறாக்கு |
| |
| எந்தநாளும் எங்கள் குலம் ஆல்போல் தழைத்திட |
| அருள்பவா வெகுபறாக்கு |
| |
| எந்தனுக்கு அரசாக தீரவா சகமுதல் |
| ஈந்தவா வெகுபறாக்கு |
| |
| உந்தனுட தூதர்கள் உரைசெய்ய யானுமே |
| ஓடியே வந்தேனய்யா |
| |
| உத்தமனே யானடியேன் ஏதுகுறை செய்தாலும் |
| உகந்தென்னை இரக்ஷிப்பீரே” |
| நடை |
| “அகமுத்தமே சொரியுமெங்கள் ஆரியப்பூ ராசேந்திரா |
| அகமுத்தமே படைத்த துரையே உமைப்பணிந்தேன் |