|
| |
| வசனம் : ராஜாதி ராஜனே தேவரீர் உத்தரவின் பிரகாரம் ஒருவாரம் தென்கரையும் நடுக்கரையும் தேடியும் காத்தவனைக் கண்டிலேன் ; நான் என்ன செய்வேன் சுவாமி. |
| சந்திரசூரியர் தனபதியுள்ளவும் தைரியமுடையதோர் ஆரிய |
| ராசனும் தன்மனம் பதறி |
| |
| உந்தனையானும் நிபந்தனையாகவே உயிர்க்கழுவில் போடுவதோ |
| உறுதியாய்நீ வளர்த்திடும் பாலனைப் போடுவதோ |
| |
| சிந்தையில் தோன்றிவேந்திட உன்மனம் |
| தெரியநீ உரைத்திடுவாய் |
| |
| சீறிய ராசனம் கூரியவாளொடு சத்தியவாய் |
| மனமயங்கியே நின்றிடத் தயங்கியே |
| |
| சேப்பிளையான் தாள்கள் பணிந்திடவாய்கள் |
| புதைத்திடத் தானுரை செய்குவாயே |
| |
| வசனம் : ஆகோ கேளங்கள் அரசுகாவல் சேப்பிளையானே ஒரு வாரமாகத் தேடி காத்தவனைக் கண்ணி்ல் காணோமென்று நம்மிடம் வஞ்ச வார்த்தை பேசுகிறாய். அவனுக்குச் செப்பனிட்ட கழுவில் அவனைப் போடுவதா அல்லது உன்னைப் போடுவதா சொல்லும் பிள்ளாய், சேப்பிளையே. |
| புத்தமிர்த நிகராத பொறுமையது |
| பெற்றிடும் புருஷனே ராசசிங்கா |
| |
| புத்தியில் கற்பக விளிபோல் |
| விளங்கிடும் புருஷனே ராசசிங்கா |
| |
| வித்தையில் வெண்தா மரையொத்த |
| ராசனே புருஷ சிங்கா |
| |
| இத்தரணி கனாகவே யேகா நதியில் |
| சூரிய விலாசனே புருஷசிங்கா |
| |
| பெற்றதால் புத்திரர்கள் செய்குற்றம் |
| பெற்றோர் பொறுப்பது போலவே |
| |
| புண்ணியா பொறுத்தெனக்கு இன்னமும் |
| போகவே மூன்று நாளும் |
| |
| சித்தமாய்நீர் அருள்கொண்டு என்னை |
| இரட்சியும் திருடனையான் பிடித்துச் |