|
சீக்கிரம் கொண்டு வருகுவேன் |
யானுமே திருவடி சரணமய்யா |
|
அவனியம் புகழ வாழும் |
ஆரியப் பேந்திர மன்னா |
|
கவலையாய் இரண்டு நாடு |
காலடி பார்த்து வந்தேன் |
|
குவலைநற சூலை சூழும் |
குறைநாடு பார்த்து வாரேன் |
|
நவமணிக் கரசு மூன்று |
நாள்மனுக்12 கொடுத்தருளு வாயே |
ராசன் சொல் விருத்தம் |
மன்னவனும் மனதிரங்கி வடகரையும் |
குறைநாடும் வளைந்து பார்த்து |
|
தென்னவனைப் பிடித்துவந்தால் உனக்குத் |
தேவை யுண்டு மரியாதை |
|
சொர்ணமது யான்கொடுப்பேன் இல்லா |
விட்டால் அவனேறும் கழுவினிலே |
|
உன்னைமிக ஏத்துவேனே உலகறிய |
சத்தியமாயுரை செய்குவானே |
|
வசனம் : ஆகோ கேளும் அரசு காவல் சேப்பிளையானே. இன்னும் மூன்று நாளில் காத்தவனைப் பிடித்துவந்தால் உனக்கு வெகுமதி செய்வேன். இல்லாவிட்டால் உன்னை கழுவில் ஏற்றுவேன். |
நடை |
கேசரமாய்ச் சேனையுடன் சேப்பிளையான் அப்போது |
வேகமுடன் ஊர்தோறும் விதவிதமாய் தேடுகிறான் |
|
அயலூர் நேர்கிழக்கு அரியலூர் நேர்மேற்கு |
ஜெயமிகுந்திடு முசிரி திருவோங்கி நாதர்மலை |
|
ஆமூர் மணமேடு அழகான தொட்டியமாம் |
காமுதலாப் பாரும் குணசீல மங்கலமாம் |
|
சுண்டைக்காய் வெள்ளூர் சோலை மருச்சலங்கத்தான் |
வண்டாடும் பூஞ்சோலை வாழ்முதலைப் பாரோரம் |